Fountain: இந்த ஐடியா Fun with Science project என்ற புத்தகத்திலிருந்து வந்தது. ஒரு பாட்டில் மூடியில் ஓட்டைகள் போட்டுக்கொள்ள வேண்டும். அதில் வெந்நீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்நீர் உள்ள பாட்டிலில் ஒரு கயிறைக் கட்டி, அதை குளிர்ந்த நீர் உள்ள பாத்திரத்தில் இறக்க வேண்டும். பாட்டிலிருந்து வெந்நீர் குளிர்ந்த நீரில் கலப்பதற்காக ஓட்டை வழியாக பவுண்டன் போல் வரும். அதன் பின் இருக்கும் அறிவியலை அப்பா தீஷுவிற்கு விளக்கும் பொழுது, சாரி.. நான் கவனிக்கவில்லை. தீஷுவும் அப்பாவின் பொறுமையை சோதிக்கும் படி அதை போரிங் ஆக்டிவிட்டியாக மாற்றி விட்டாள்.
Bridge: நாம் அடிக்கடி சாலைகளின் போகும் பொழுது உபயோகப்படுத்துவது பாலங்கள். தீஷு எப்பொழுதும் பாலத்தில் போக வேண்டும் என்பாள். கீழே செல்லுவதைப் பார்ப்பதற்கு அவளுக்கு மிகவும் இஷ்டம். அதனால் அப்பா டம்பளர்களால் பாலம் கட்டி, பாலங்களின் பயன்களை விளக்கினார்.
தீஷுவிற்கு சோலார் ஸிஸ்டம் பற்றி சொன்னத்திலிருந்து அவளுக்கு அதில் விருப்பம் அதிகம். ஒரு முறை நெட்டிலிருந்து எப்படி கோள்கள் சூரியனைச் சுற்றி வருகினறன் என்பதை காண்பித்தேன். அதைப் பார்த்தவுடன் அவளும் சூரியன் வரைந்து கோள்கள் சுற்றுவது போல் வரைந்து காண்பித்தாள். அதை அடிப்படையாகக் கொண்டு, இரவு பகல் எவ்வாறு வருகிறது என்பதனை அப்பா விளக்கினார்.
பூமி (Globe) எடுத்துக் கொண்டனர். ஒரு இருட்டு அறைக்குச் சென்று, டார்ச் இல்லாததால், மொபைலில் வெளிச்சம் ஏற்படுத்தினர். அப்பொழுது இந்தியா உள்ள பகுதி மட்டும் வெளிச்சமாக இருந்தது. அது பகல் என்று, பூமியை மெதுவாகச் சுற்றினார். அப்பொழுது இந்தியாவில் இரவும் அதன் எதிர்பக்கத்தில் பகலும் ஆனது. தீஷு எளிதாகப் புரிந்து கொண்டாள். திரும்ப திரும்ப செய்து காட்டி விளக்கிக் கொண்டிருந்தாள். அவள் அப்பா சொல்லிக் கொடுத்ததில் அவளுக்கு மிகவும் பிடித்தது இது தான் என்று நினைக்கிறேன். முடித்தப்பின்னும் அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். போட்டோ ஃப்ளசினால் வெளிச்சமாகத் தெரிகிறது.
கலக்கல் ஆக்டிவிடிஸ்!
ReplyDelete//
Fountain: இந்த ஐடியா Fun with Science project என்ற புத்தகத்திலிருந்து வந்தது.//
இதைப்பற்றி கத்துக்கிட்டு இல்லை படிச்சுட்டு விவரமா எழுதுங்க.
இன்ட்ரஸ்டிங் ஆக்டிவிட்டீஸ்! அந்த இரவு பகல் விளையாட்டு பெரிம்மா எனக்கு டார்ச் லைட் வைத்து சொல்லிக்கொடுத்ததை நினைவூட்டுகிறது! அப்போ எனக்கு ஐந்து வயது!! நன்றி...
ReplyDelete