என் சொந்த ஊர் மதுரையில் படிப்பை முடித்து பெங்களூரில் மென்பொருள் இன்ஜினியராக வேலை பார்த்தேன். ஆறு ஆண்டுகள் முடிந்த நிலையில் என் முதல் குழந்தை பிறந்தாள். அவளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையில் விடுப்பு எடுத்தேன். பின் வேலை சேர்ந்து மூன்று ஆண்டுகள் முடித்த நிலையில் என் இரண்டாவது குழந்தை பிறந்தாள். தற்பொழுது மீண்டும் விடுப்பில் இருக்கிறேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வேலையில் சேரலாம் என்று நினைத்திருக்கிறேன். :))
என் முதல் குழந்தையின் பெயர் தீஷு. அவள் இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள். ஏதாவது என்னுடன் விளையாடு என்ற அவளின் தொணதொணப்பு(!) கேட்காத நாட்கள் இல்லை. அவளுடன் அவளுக்கு விருப்பமான முறையில் விளையாடத் தொடங்கினேன். என் நண்பர்கள் மற்றும் கணவரின் உற்சாகத்தின் பெயரில் இந்தப் பதிவில் எங்கள் விளையாட்டைப் பற்றி பதியத் தொடங்கினேன். தற்பொழுது என் இரண்டாவது குழந்தை சம்முவும் இணைந்து இருக்கிறாள்.
எங்களின் விளையாட்டுக்கள் பற்றிய இடுகைகள் உங்கள் குழந்தையுடன்(களுடன்) விளையாடுவதற்கு ஏதாவது ஐடியா கொடுக்கும் என்பது என் தாழ்மையான கருத்து :)). குழந்தைகளுடன் விளையாடுவதில் சரி தவறு என்பது இல்லை என்பதால் வாங்க நம் குழந்தைகளுடன் விளையாடுவோம்.

அன்பின் தியானா - சுய அறிமுகம் அருமை - தீஷு மற்றும் சம்முவுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete