பிரிண்ட்டிங் மிகவும் பொதுவானது. ஏதோவொரு வகையில் செய்திருப்போம். உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், வெண்டைக்காய் போன்றவைகள் வைத்து பிரிண்டிங் செய்வதை பள்ளியில் சொல்லிக் கொடுப்பர். தீஷுவிற்கும் பிரிண்ட்டிங் மிகவும் பிடிக்கும். அடிக்கடி செய்வோம். இந்த முறை நான் தேர்ந்தெடுத்தது மாஃபின் டின் (Muffin tin). மாஃபின் டின்னைத் திருப்பி அதன் அடி பாகத்தில் கலர் செய்ய வேண்டும். அதன் பின் பேப்பரை அதன் மேல் வைத்து, பேப்பரில் பிரிண்ட் எடுக்க வேண்டும். விருப்பமான வரை அதே பேப்பரில் மேலும் மேலும் பிரிண்ட் எடுத்துக் கொண்டேயிருந்தோம்.

Brush Strokes அழகாகவும் தெளிவாகவும் வந்திருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த பெயிண்ட்டிங் ஐடியா இணையத்திலிருந்து எடுத்தது. பேப்பரை சதுர வாக்கில் வைத்து கோடுகள் வரைந்து கொள்ள வேண்டும். பல வர்ண கோடுகள். காய வைத்து விட வேண்டும்.

காய்ந்தவுடன், பேப்பரை நீள வாக்கில் வைத்து வெட்ட வேண்டும். ஒரு முழு பேப்பரை எடுத்து, நீள வாக்கில் சற்று இடைவெளி விட்டு வெட்டிய பேப்பர்கள் ஒட்ட வேண்டும். மிகவும் எளிதானது. ஆனால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது.

தற்பொழுது எங்கள் வரவேற்பரையை அலங்கரிக்கின்றன.
வாவ்...செம கலர்புல்!
ReplyDeleteஊருக்கு போய்ட்டீங்களா, தியானா?
US வந்திருக்கோம். இரண்டு வருஷம் இங்க இருக்கும் ஐடியா இருக்கு முல்லை.
ReplyDeletevery very nice Dhiyana..
ReplyDelete