அன்று தீஷுவிற்கு பள்ளி விடுமுறை. நான் வீட்டிற்குள் நுழைந்தவுடன், "அம்மா நான் உங்களுக்குத் தான் ஸர்ப்பிரைஸ் கிஃப்ட் செய்திட்டு இருக்கேன்" என்றாள். குனிந்து ஏதோ செய்து கொண்டிருந்தாள். அருகில் சென்ற பொழுது மறைத்து கொண்டாள். கலரிங் செய்து கொண்டிருக்கிறாள் என்று மட்டும் புரிந்தது. பகலில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அதை செய்திருக்கிறாள் என்று என் அம்மா சொன்னார்கள். கலரிங் முடியாமல் அப்பொழுதும் செய்து கொண்டிருந்தாள். அன்று எனக்கு மிகவும் அலுப்பாக இருந்ததால், அவளை அப்பாவிடம் விட்டு விட்டு நான் தூங்கி விட்டேன். தூங்க செல்வதற்கு முன்னாலும், நாளைக்கு முடிச்சுடுவேன்.. தர்றேன் என்றாள்.
மறுநாள், அவள் எழுந்தவுடன், முதல் வேளையாக அந்த பேப்பரை எடுத்து வந்தாள். வரைந்து கலர் செய்திருந்தாள். "அம்மா எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. அதான் வரஞ்சேன்.. பிடிச்சிருக்கா" என்றாள். கண்ணில் என் பதிலை எதிர்நோக்கி அத்தனை ஆர்வம். கட்டிபிடித்துக் கொண்டேன. கடல், வீடு, மிருகங்கள் என விளக்கமளித்தாள். ஒரு டிராயிங் ஸீட் பொழுவதும் கலர் செய்ய கண்டிப்பாக அதிக நேரமும், பொறுமையும் தேவைப்பட்டு இருக்கும்.

Thanks da, You make my day, everyday
லேமினேட் பண்ணி வெச்சுகுங்க தீஷும்மா. என்ன வேணும் இதுக்கு மேல வாழ்க்கைல?
ReplyDeleteஎந்த தேவதையும் நேராக வந்து வரம் தருவதில்லை :)
ஆகா..செம சூப்பர்! தீஷூக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteஏன் ரொம்ப நாளா ஆளைக்காணோம்?!