அதற்கு அப்புறம் ஒவ்வொரு நாளும் கூப்பிடப் போகும் பொழுது மிஸ்.கீதாவோ, மிஸ்.சீதாவோ அவளைத் தூக்கி வைத்திருப்பார்கள். அவளை கிட்டத்தட்ட மூன்று மணி நேரமும் தூக்கி வைத்திருந்தோம் என்பார்கள். கேட்கவே கஷ்டமாக இருக்கும். ஆனால் இப்பொழுது பள்ளி சூழ்நிலை மிகவும் பிடித்து விட்டது. இப்பொழுது தீஷு தினமும் பள்ளிக்கு போக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். வீட்டிலிருந்தால் நான் ஏதாவது செய்ய சொல்லுவேன் என்ற பயமாகவும் இருக்கலாம். பள்ளி சூழ்நிலையைப் பழக்கப்படுத்தியவர்கள் இவ்விருவர்கள் தான்.
மிஸ்.சீதாவின் முகத்தில் சிரிப்பைத் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை. ஐந்து ஆறு டீச்சர்கள் இருந்தாலும் மிஸ்.சீதாவை சுற்றி எப்பொழுதும் ஒரே மழலைப் பட்டாளம். தீஷுவிற்கு பின்னாளில் அவளின் முதல் டீச்சர்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றே இப்பதிவு.
கிளம்பும் முன் தீஷுவின் டீச்சர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். பரிசு வாங்கினோம். ஆனா வாழ்த்து அட்டை மட்டும் தீஷுவை வைத்து செய்ய வைத்தேன். மிஸ்களுக்கு வாழ்த்து அட்டை என்றவுடன் அவளுக்கு ஒரே சந்தோஷம். அட்டையின் முன் பக்கத்தில் வரைறீயா? பெயிண்டிங் செய்றீயா? என்றேன். crayon வைத்து வரைந்து அதன் மேல் பெயிண்டிங் செய்து விட்டாள். நான் மார்பிள் பெயிண்டிங் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவள் பிரஷ் வைத்து செய்ய வேண்டும் என்றாள். ஆகையால் இந்த அட்டைகளைச் செய்தோம். அட்டையில் "Thank you" Dheekshitha என்று நான் எழுத்துக்களைச் சொல்ல சொல்ல எழுதினாள்.

தீஷுவிற்கு பள்ளியை அறிமுகப்படுத்திய, பழக்கப்படுத்திய இவ்விருவருக்கும் என் நன்றிகள்.
ohh..so touchy!! அழகா இருந்துது ரெண்டு வாழ்த்து அட்டைகளும்! :-)
ReplyDelete/*பின்னாளில் அவளின் முதல் டீச்சர்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றே இப்பதிவு*/
ReplyDeleteநல்ல எண்ணம். வாழ்த்துகள்
நன்றி முல்லை.
ReplyDeleteநன்றி அமுதா.
அழகான வாழ்த்து அட்டைகள்
ReplyDeleteஅழகான வார்த்தைகள்
/*பின்னாளில் அவளின் முதல் டீச்சர்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும் என்றே இப்பதிவு*/
இன்னமும் கற்றுக்கொள்கிறேன் உங்களிடமிருது.
நன்றி.