தீஷு கத்திரிக்கோலால் வெட்டினாலும், நேராக வெட்டத் தெரியாது. அதனால் 2 இன்ச் நீளப் பேப்பரில் கோடுகள் வரைந்து, கோட்டின் மீது வெட்ட வைத்தேன். ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவளால் செய்ய முடியவில்லை. சிறிது நாட்கள் கழித்து முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு படத்தை எடுத்துக் கொண்டு, அந்த படத்தின் மேல் toothpickஆல் ஓட்டைப் போட வேண்டும். மிகவும் கவனம் தேவை. தீஷு ஓட்டைப் போடவே கஷ்டப்பட்டாள். ஆகையால் நான் இருவது ஓட்டைப் போட்டு, அதன் மேல் அழுத்த சொன்னேன். இஷ்டமாக செய்தாள். இதில் எழுதுவதற்கு பயன்படும் அனைத்து விரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.
உங்க அக்டிவிடீசெல்லாம் பாது நானும் உங்களை பாலோ பண்ண ஆரம்பித்துவிட்டேன்.
ReplyDelete>>>toothpickஆல் ஓட்டைப் போட வேண்டும்.
ReplyDeleteஅதெப்படி பின்னால் குத்தாமல் செய்வது எப்படி!?
ஆஹா... தீஷு 3.5 நாள் பள்ளிக்கு செல்வதற்கும் மேலாக வீட்டில்தான் நிறைய நடவடிக்கைகள் இருக்கும் போல... தொடர் பகிர்தலுக்கு நன்றி.
செய்யும் ஓவ்வொரு நடவடிக்கையிலும் பிரதிப்லன் என்ன
(இதில் எழுதுவதற்கு பயன்படும் அனைத்து விரல்களும் உபயோகப்படுத்தப்படுகிறது.)
என்றும் நீங்கள் எழுதுவது மிக பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
நன்றி சசிரேகா.
ReplyDeleteவருகைக்கு நன்றி அன்பு.
//அதெப்படி பின்னால் குத்தாமல் செய்வது எப்படி//
உங்க கேள்வி புரியவில்லை.