தீஷு பிறந்த நாளுக்கு இந்த Pattern Blocks வாங்கினோம். அப்பொழுது அவளுக்கு இதை பண்ணுவதற்கு விருப்பம் இருக்கவில்லை. எடுத்து வைத்து விட்டோம். போன வாரம் மீண்டும் முயற்சி செய்தோம். நன்றாக செய்கிறாள். தாளில் கொடுத்திருக்கும் படத்தை வெவ்வேறு Shapes கொண்டு உருவாக்க வேண்டும்.
தீஷு தூங்குகிறாளே என்று அவளுக்காக சில ஒட்ட வேண்டியதை ஒட்டிக் கொண்டு இருந்தேன். எழுந்து விட்டாள். தானும் ஒட்ட வேண்டும் என்றாள். ஒரு வெள்ளைத் தாளில் மற்றொரு வெள்ளைத் தாளை கிழித்து கிழித்து ஒட்ட சொன்னேன். கிழிக்க கஷ்டப்பட்டாள். என்னத்த கிழிச்சனு அவளை கேட்கலாம்.

Knobless Cylinder - மாண்டிசோரி சாதன Patterns போன்று, நான் ஒரு பேப்பரில் வரைந்து கொண்டேன். இரண்டு copies print out எடுத்துக் கொண்டேன். ஒரு copyலுள்ள வட்டங்களை வெட்டி எடுத்து, அந்த வெட்டி எடுத்த வட்டங்களை, தீஷு மற்றொமொரு copyயில் சரியான அளவு வட்டங்களுடன் பொருத்த வேண்டும். நன்றாக செய்தாள்.
:-))..ஒட்டறது, கிழிக்கறதுன்னாலே குஷிதான்!! இப்போதான் கிழிக்கறது கொஞ்சம் நின்னுருக்கு எங்க வீட்டுல!!
ReplyDeleteதீஷுவிற்கு கிழிக்கப் பழகணும் முல்லை. அவளுக்கு இன்னும் கிழிக்கத் தெரியல..
ReplyDelete